இயேசுவைப் பற்றி எடுக்கப்படும் முடிவாகட்டும்! கிறித்தவர்கள் தமது மதம் சம்மந்தப்பட்ட சட்டங்களைத் தீர்மானிப்பதாகட்டும்! கிறித்தவர்கள் வேதமாக நம்புகின்ற பைபிளின் போதனைக்கு உட்பட்டதாகவே அது இருக்க வேண்டும். பைபிளுக்கு முரணாக எடுக்கப்படும் எந்த முடிவாக இருந்தாலும் அதை அவர்கள் நிராகரிக்க வேண்டும். இயேசுவைக் கடவுள் என்றோ கடவுளின் குமாரர் என்றோ நம்புவதற்கு கிறித்தவர்கள் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களும் தவறானவை என்பதை பைபிளிலிருந்தே நிரூபித்துக் காட்டினோம். முடிவாகச் சில போதனைகளை முன் வைக்கிறோம். கடவுள் ஒருவர் தான் என்பதை அழுத்தமாகச் சொல்லும் அந்தப் போதனைகளைப் பைபிளிலிருந்தே முன் வைக்கிறோம்.
கடவுள் ஒருவரே மூவர் அல்ல:
"ஆகையால் உயர வானத்திலும், தாழ பூமியிலும் கர்த்தரே தேவன். அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து" -(உபகாமம் 4:39)
"இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக் கொள்கிற போதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக் குறித்துப் பேசி" - (உபாகமம் 6:4-7)
"நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே, என்னைத் தவிர தேவன் இல்லையென்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும் சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்." - (ஏசாயா 44:6)
"எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை. எனக்குப் பின் இருப்பதுமில்லை. நான், நானே கர்த்தர். என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. நானே அறிவித்து இரட்சித்து, விளங்கப் பண்ணினேன். உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை. நானே என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்." - (ஏசாயா 43:10-12)
"வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை." - (ஏசாயா 45:18)
"நானே கர்த்தர். வேறொருவர் இல்லை. என்னைத் தவிர தேவன் இல்லை. என்னைத் தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன். நானே கர்த்தர், வேறொருவர் இல்லை." - (ஏசாயா 45:5,6)
"நானே தேவன். வேறொருவரும் இல்லை. நானே தேவன். எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற் கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலை நிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி" - (ஏசாயா 46:9,10)
"என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்." - (யாத்திராகமம் 20:3)
"கர்த்தரே தேவன். அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு இது உனக்குக் காட்டப்பட்டது." - (உபாகமம் 4:35)
"இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்மாவோடும் உன் முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது." - (உபாகமம் 6:4-6)
"நானே தேவன்; வேறொருவரும் இல்லை; நானே தேவன்; எனக்குச் சமானமில்லை"- (ஏசாயா 46:9) என்று கர்த்தர் கூறினார்.
"
நானும் கடவுள்' என்று கர்த்தர் கூறினால் இயேசுவையும் கடவுள் என்று கிறித்தவர்கள் நம்புவதில் நியாயமிருக்கும். "
நானே - நான் மட்டுமே - கடவுள்'' என்ற பைபிளின் இவ்வசனம் இயேசு உள்ளிட்ட எவரும் கடவுளாக முடியாது என்பதைக் கூறுகின்றது. எனக்கு இணையில்லை; நிகரில்லை என்ற சொற்கள் இன்னும் இதை அழுத்தமாகக் கூறுகிறது. இதற்கு முரணாக இறை மகன் என்ற சொல்லுக்கு விளக்கம் தருவது பைபிளுக்கே முரணாகத் தோன்றவில்லையா?
தொடரும்....
இக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் மூன்றாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் நான்காம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் ஐந்தாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 6-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 7-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 8-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 9-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 10-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 11-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 12-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 13-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 14-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 15-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 16-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 17-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 18-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 19-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 20-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 21-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 22-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 23-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 24-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 25-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 26-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 27-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.