இயேசு இறைமகனா - தொடர் 25
விபச்சார சந்ததி கடவுளின் மகனாக முடியாது
பைபிளில் இயேசுவின் பாரம்பர்யம்:
"வேசிப் பிள்ளைகள், விபச்சாரச் சந்ததியினர் கர்த்தரின் சபைக்கு உட்படலாகாது" என்று பைபிள் கூறுகிறது. - (உபகாமம் 23:2, 3)
விபச்சாரச் சந்ததிகள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் அல்லர் என்று அடித்துச் சொல்லும் பைபிள் இயேசுவையே விபச்சார சந்ததி எனவும் கூறுகிறது.
தாமார் வம்சத்தில் பிறந்தவர் இயேசு:
தாமார் தனது மாமனாராகிய யூதாவுடன் கள்ளத் தொடர்பு கொண்டு பிள்ளை பெற்றவள் என்று பைபிள் கூறுகிறது.
அப்பொழுது "உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது?'' சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுக்களுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா? என்றான். அதற்கு அவள், நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன், நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள். யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக் கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல், அவ்விடத்து மனிதரை நேக்கி: வழியண்டை நீரூற்றுக்கள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள். அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான். அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டு போனால் போகட்டும் என்றான். ஏறக்குறைய மூன்று மாதம் சென்ற பின்பு "உன் மருமகளாகிய தாமார் வேசித் தனம் பண்ணினாள், அந்த வேசித் தனத்தினால் கர்ப்பவதியுமானாள்'' என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: "அவளை வெளியே கொண்டு வாருங்கள், அவள் சுட்டெரிக்கப்பட வேண்டும்'' என்றான். அவள் வெளியே கொண்டு வரப்பட்ட போது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. அவளுக்குப் பிரசவகாலம் வந்த போது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன. அவள் பெறுகிற போது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதன் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக் கொண்ட போது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறி வந்ததென்ன, இந்த மீறுதல் உன் மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது. - (ஆதியாகமம் 38:13-29)
பைபிளின் மேற்கண்ட வசனத்தில் தாமார் என்ற பெண்ணைப் பற்றிக் கூறப்படுகிறது. அவள் தெரிந்து கொண்டே தனது மாமனாரிடம் விபச்சாரம் செய்து அதன் மூலம் இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள் எனக் கூறப்படுகிறது. தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக தனது மாமனாரிடம் வஞ்சகமாக அடைமானம் பெற்றுக் கொண்டாள் என்பதும் தெரிகின்றது.
ஒழுக்கம் கெட்டவள் என்று பைபிள் அறிமுகப்படுத்தும் "தாமார்' என்பவள் வழியில் தான் இயேசு பிறந்தார் எனவும் பைபிள் கூறுகிறது. மத்தேயுவின் முதல் அதிகாரத்தில் 1 முதல் 16 வரை இயேசுவின் பரம்பரைப் பட்டியல் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் தாமார் என்ற ஒழுக்கங்கெட்டவளும் இடம் பெற்றுள்ளாள்.
தொடரும்....
இக்கட்டுரையின் முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் மூன்றாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் நான்காம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் ஐந்தாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 6-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 7-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 8-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 9-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 10-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 11-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 12-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 13-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 14-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 15-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 16-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 17-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 18-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 19-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 20-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 21-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 22-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 23-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
இக்கட்டுரையின் 24-ம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.