ஏக இறைவனின் திருப்பெயரால்...
உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக

35 கோடி மோசடி-பாதிரியாருக்கு போலிஸ் வலை

5 மடங்கு பணம்- 35 கோடி மோசடி!

சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (43). மத போதகர். இவரது நண்பர் அம்பத்தூர் திருவேங்கடம் நகரை சேர்ந்த பாஸ் டர் பிரபாகரன். இவர் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.
அதில் உறுப்பினராக சேர ரூ 2,100 கட்டினால், முதல் 2 மாதம் ரூ 600, மூன்றாம்

மாதம் முதல் 11 மாதம் வரை ரூ 1,200 என மொத்தம் ரூ 12 ஆயிரம் வழங்கப்படும்.அதேபோல ரூ 5,250 கட்டி னால் 11 மாதத்தில் ரூ.27 ஆயிரம்,ரூ 10,500 கட்டினால் 11 மாதத்தில் ரூ 54 ஆயிரம், ரூ 26,250 கட்டினால் 11 மாதத்தில் ரூ. 1 லட்சத்து 23,800 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர தமிழகம், ஆந்திர மாநிலம் முழுவதும்

பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மூலமாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம்

பணம் வசூலித்து பிரபாகரனிடம் கொடுத்துள் ளார் கிருபாகரன், அதன்படி இந்த

திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு கடந்த சில மாதங்களாக அறிவித்தபடி பிரபாகரன்

பணமும் கொடுத்துள்ளார். ஆனால், கடந்த 3 மாதமாக பணம் கொடுக்கப்படவில் லை.

இதுகுறித்து, பணம் வசூலித்துக் கொடுத்த பாஸ்டர்கள், கிருபாகரனை சந்தித்து

விசாரித்தனர். அவர் பணம் வாங்கித் தருவதாகக் கூறி காலம் கடத்தியிருக்கிறார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு மு ன்பு, கிருபாகரன் குடும்பத்துடன் தலைமறைவானார்.

அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் ஒருவரான திருநின்றவூர் வடிவேல் நகரை சேர்ந்த பாஸ்டர் கோபு, திருமுல்லைவாயல் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்  பதிவு செய்து விசாரித்தார்.

இதற்கிடையில், கிருபாகரனை 5 பேர் கடத்திச் சென்று புரசைவாக்கத்தில் லாட்ஜில் அடைத்து வைத்திருப்பதாக, அவரது மனைவி ராகில் புகார் செய்தார். அதன்பேரில், திருமுல்லைவாயல் போலீஸ்  இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், தமிழ்வாணன் ஆகியோர் அங்கு சென்று அவரை மீட்டு வந்தனர். அவரை கடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.மீட்கப்பட்ட கிருபாகரனிடம் விசாரித்தபோது, உறுப்பினர்களிடமிருந்து ரூ. 35 கோடி வசூலித்து ஏமாற்றிய விவரம் தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் 

ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அறக்கட்டளை  நடத்திய பிரபாகரனை போலீசார் தேடி வருகின்றனர்.